தந்தை இறந்தும் தேர்வு சென்ற பிளஸ் டூ மாணவி அனிதா தேர்வில் 600-க்கு 514 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதை தொடர்ந்து சி.ஏ படிக்க ஆர்வம் என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு உதவி செய்ய கோரிக்கை.
விழுப்புரம் மாவட்டம், அடுத்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் சுப்பராயலு குப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். சுப்பராயலு மிளகாய் வியாபாரம் செய்பவர். தினந்தோறும் சைக்கிளில் சென்று தான் மிளகாய் வியாபாரம் செய்து வருவார்.

தன்னுடைய பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தனது நான்கு மகள்களையும் கல்லூரியில் படிக்க வைத்தார்.
சுப்பராயலு ஐந்தாவது மகள் அனிதா சரவணப்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்திருந்தால் அரசு பொது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் தமிழ் தேர்வை எழுதி முடித்த அனிதாவுக்கு தொலைபேசி அழைப்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார் என்ற தகவல் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது தந்தை உயிரிழந்தார்.

மறுநாள் ஆங்கில தேர்வு தந்தை உயிரிழந்து பிரேத பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது அனிதா ஆங்கிலத்தில் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். உடனே தேர்வு எழுதி முடித்தவுடன் வீட்டிற்கு வந்து தந்தையின் உடல் அடக்கத்தில் கலந்து கொண்டார்.
அனிதா இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 600 மதிப்பெண்ணுக்கு 514 மதிப்பெண் பெற்றிருந்தார். அனிதா தொடர்ந்து ca படிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.