பிளஸ் 2 தேர்வு இன்று ரிசல்ட் – வழக்கம் போல் ஸ்கோர் செய்த மாணவிகள்..!

2 Min Read

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடந்தது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

பிளஸ் 2 தேர்வு இன்று ரிசல்ட் – வழக்கம் போல் ஸ்கோர் செய்த மாணவிகள்

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் இந்த இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வு இன்று ரிசல்ட் – வழக்கம் போல் ஸ்கோர் செய்த மாணவிகள்

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை
நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தேர்வு இன்று ரிசல்ட்

மேலும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு இன்று ரிசல்ட் – வழக்கம் போல் ஸ்கோர் செய்த மாணவிகள்

இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டுள்ள நிலையில்,

94.56 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Share This Article

Leave a Reply