ஓசூரில் காதலை கைவிட மறுத்த பிளஸ் 1 மாணவி – அடித்து கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் உள்பட 3 பேர் கைது..!

2 Min Read

ஓசூர் அருகே, காதலை கைவிட மறுத்த பிளஸ் 1 மாணவியை அடித்து கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த ஓசூர் அருகே பாகலுார் பட்டவாரப்பள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி பிரகாஷ் வயது (50). இவரது மகள் ஸ்பூர்த்தி வயது (16). இவர் பாகலுார் அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் ஓசூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா வயது (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார்.

காதலை கைவிட மறுத்த பிளஸ் 1 மாணவி – அடித்து கொன்று ஏரியில் வீசிய பெற்றோர்

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாத நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வீட்டிலிருந்து சிவா அழைத்து சென்றார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஓசூர் போலீசார் சிவாவை போக்சோவில் கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன், ஸ்பூர்த்தி காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

பாகலூர் போலீசார்

இதையறிந்த பெற்றோர், மகளை கண்டித்தது தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி, திடீரென மாணவி மாயமானார். இதை அடுத்து நேற்று முன்தினம் இரவு, தலையில் பலத்த காயங்களுடன் பட்டவாரப்பள்ளி ஏரியில் மாணவி உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் தகவலறிந்து சென்ற பாகலூர் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இதை அடுத்து, பட்டவாரப்பள்ளி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, பாகலூர் போலீசார் ஆய்வு செய்தனர்.

சிசிடிவி கேமரா காட்சி ஆய்வு

அதில், மாணவி மாயமான தினத்தில், வீட்டிற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை மர்ம நபர் ஒருவர், துணி போட்டு மூடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, மாணவியின் பெற்றோர் பிரகாஷ்- காமாட்சி வயது (35), பெரியம்மா மீனாட்சி வயது (37) ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், சிவாவை மறக்குமாறு வற்புறுத்தியும் கேட்காமல், அவருடன் சுற்றி திரிந்ததால் வீட்டில் இருந்த மாணவியை கட்டில் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

காதலை கைவிட மறுத்த பிளஸ் 1 மாணவி – அடித்து கொன்று ஏரியில் வீசிய பெற்றோர் உள்பட 3 பேர் கைது

அப்போது தடயத்தை மறைப்பதற்காக சடலத்தை டூவீலரில் ஏற்றி சென்று, சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளி ஏரியில் வீசி விட்டு வந்ததாக தெரிவித்தனர்.

இதை அடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் மீனாட்சி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply