- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் பராமரிப்பு என கூறி ஒரு மாதமாக விநியோகம் இல்லாமையால் குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள் காலி குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமத்தினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த முதலியார்பட்டி அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இப்பகுதியினருக்கு குடிநீர் விநியோகம் செய்யக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது சேதமடைந்து காணப்பட்ட காரணத்தினால் தற்போது பராமரிப்பு பணிகள் செய்கிறோம் எனக் கூறி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வேலையை காலம் தாழ்த்தி ஆமை வேகத்தில் வருகிறது. மேலும் இந்த பணிகள் நிறைவடைய சில மாதங்களாகும் என கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடையம் அருகே முதலியார் பட்டி இந்திரா நகர் குடியிருப்பு வாசிகளுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட திமுக பஞ்சாயத்து தலைவி முகைதீன் பீவி அசன் அவர்களிடம் முறையிட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றம்சாட்டினார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/all-india-anna-dravida-munnetra-kazhagam-53rd-inauguration-ceremony-garlanding-of-mgr-statue/
இதனால் இன்று அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கடையம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து யூனியன் அலுவலரிடம் தற்போது பணி நடக்கும் குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைத்து தர வேண்டும், அதுவரை அருகேயுள்ள குடிநீர் தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கடையம் யூனியன் அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.
Leave a Reply
You must be logged in to post a comment.