தந்தையை வெட்டி கொன்ற உடற்கல்வி ஆசிரியர்..!

2 Min Read

கயத்தாறு அருகே தந்தையை வெட்டி கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தசரதன் வயது 55 விவசாயி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இவரது மூத்த மகன் அஸ்வத் குமார் வயது (30) இவர் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

அஸ்வத் குமாருக்கும் கயத்தாறு அருகே பன்னீர்குளத்தை அடுத்த கீழ கூட்டு பண்ணையை சேர்ந்த விவசாயி ஷீமன் நாராயணசாமி என்ற கண்ணனின் மகள் அருணாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வித்யா வயது (3) விஷாலினி வயது (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர் அஸ்வத் குமார்

தனது குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட அஸ்வத் குமார் அவ்வப்போது தனது மாமனார் வீட்டுக்கு சென்று, குழந்தைகளை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக குழந்தைகளை அவரது மாமனார் அஸ்வத் குமாரிடம் அழைத்து வந்து காண்பித்து சென்றார். இதனால் அஸ்வத் குமார் தன் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று, மனவேதனையிலும், ஆத்திரத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் ஆவேசம் அடைந்த அசோக் குமார் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் தனது மனைவி மாமனாரை தாக்குவதற்காக அறிவாளை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இதை பார்த்த அஸ்வத் குமாரின் தந்தை தசரதன் தனது மருமகள் அருணாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவரத்தை கூறி வீட்டை பூட்டிக் கொண்டு உள்ளே இருங்கள், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்தார். உடனே அருணாவின் தந்தை கண்ணன் சுதாகரித்து கொண்டு, வீட்டில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டி கொண்டார். அங்கு வந்த அசோக் குமார் கேட்டின் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்தார். பின்னர் வீட்டின் கதவுகளை அறிவாளால் சாரா மாறியாக வெட்டினார்.

போலிசார் தப்பி ஓடிய அஸ்வத் குமாரை பிடித்து கைது

இதற்கிடையே அவர்கள் தந்தை தசரதன் காரில் அங்கு வந்தார். அவரது தனது மகனை தடுத்து வெளியே இழுத்தார். இதில் ஆத்திரமடைந்த அஸ்வத் குமார் தந்தை என்றும் பாராமல், தசரதனை அறிவாலால் சரா மாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இருந்தார். பின்னர் அசோக் குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அஸ்வத் குமாரை பிடித்து கைது செய்து, விசாரணை நடத்து வருகின்றனர்.

மனைவி மாமனாரை தாக்க முயன்றதை தடுத்த தந்தையை, உடற்கல்வி ஆசிரியர் கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article

Leave a Reply