- தேனி மாவட்டம் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்ததை ரத்து செய்ய உத்தரவிட கோரி மனு தாக்கல். சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக இருந்த நாகமணியின் பதவி நீக்கத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஊராட்சி மன்ற தலைவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் முறையாக பரிசீலிக்கப்படவில்லை, ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு உரிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை- நீதிபதி கருத்து.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்த நாகமணி உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனு. நான் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி ஊராட்சி மன்ற தேர்தலில் சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
எனது ஊராட்சியில் மொத்தம் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் அதில் 6 பெண் வார்டு உறுப்பினர்கள் 6 ஆண் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது பணியினை சிறப்பாகவும் கொரோனா தொற்றுக்காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக மாவட்ட நிர்வாகம் எனக்கு பாராட்டுகளையும் தெரிவித்து இருந்தது.எனது ஊராட்சி பகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்து வந்தேன்.
இந்நிலையில் வார்டு உறுப்பினர் நான் பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் எனக்கு உரிய மரியாதை தராமலும் என் மீது வேண்டுமென்றே பல்வேறு பொய்யான புகார் தெரிவித்து வந்தனர் பின்னர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கூட என்னை கலந்து கொள்ளாத அளவிற்கு பிரச்சனை செய்து வந்தனர்.
மேலும் 2022 ஆண்டுக்கான ஊராட்சி நிதியை முறையீடு செய்ததாக என் மீது பொய்யான புகாரை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்திருந்தனர் அந்த புகாருக்கு நான் உரிய விளக்கமும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளேன்.
ஆனால் 2023 ஆண்டு மாவட்ட ஆட்சியர் விதிமுறைகளை மீறி ஊராட்சி வங்கி பண பரிவர்த்தனை கையெழுத்திடும் எனது அதிகாரத்தையும் பறித்து உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.என் மீது கூறப்பட்ட புகார்களுக்கும் பண மோசடி செய்ததாக கொடுத்த பொய்யான புகார்கள் அனைத்திற்கும் முறையான விளக்கமும் மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் என் மனு மீதான எந்த உரிய விசாரணையும் நடத்தாமலும் என் மனு உரிய பரிசீலனை செய்யாமலும் நான் ஊராட்சி நிதி சுமார் 4 லட்சத்தை முறைகேடு செய்ததாக தேனி மாவட்ட ஆட்சியர் கடந்த 2024 அக்டோபர் மாதம் என்னை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவு சட்ட விதிகளுக்கு முரணானது எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/a-suit-seeking-an-order-to-repair-the-roads-from-papanasam-to-agasthiyar-falls/
விசாரணை செய்த நீதிபதி மனுதாரரின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு உரிய காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டு மனு குறித்து ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.



Leave a Reply
You must be logged in to post a comment.