தமிழக அரசின் மெத்தனப்போக்கால் மத்திய அரசு திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
தமிழகத்தில், பாரதிய ஜனதா மகளிர் அணி தேசிய தலைவரும், எம்.எல்.ஏ.வுக்கான வானதியின் கணவர் சீனிவாசனுக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை தொடர்ந்து தம்பதியினர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நேற்று குடும்பத்துடன் வந்தனர். அங்கு இருவருக்கும் சஷ்டியப்த பூர்த்தி நடந்தது.பின்னர் தம்பதினர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அதனை தொடர்ந்து தம்பதியினர் கோபூஜை, கஜபூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர், சீனிவாசன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதற்கு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனாலும் காவிரி நீர் கிடைக்காமலும், பருவமழை பொய்த்து போவதாலும் விவசாயிகள் கடுமையான துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுடைய நலனை பாதுகாக்க வேண்டும் என்றால் நானும் டெல்டாக்காரன் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சினைக்கு நிறைந்த தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.
அதை விடுத்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் அறிக்கை விடுத்து ஏமாற்றக்கூடாது. பயிர் காப்பீடு திட்டத்தில் பிரதமர் முன்னுரிமை கொடுத்தாலும் மாநில அரசு பயிர் காப்பீட்டில் தன் பங்கை செலுத்தாததால் விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை. மாநில அரசின் மெத்தன போக்கினால் மத்திய அரசின் திட்டங்களின் பலன் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பூட்டுச் சாவி சுத்தியல் கதை சொல்லி விமர்சனம் செய்தது குறித்து வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக கதை சொல்ல ஆரம்பித்துள்ளார். அதனை தொடர்ந்து நிறைய கதைகள் சொல்லட்டும். அவர் சொல்கிற கதைகள் எல்லாம் கோர்ட்டில் வேறு மாதிரி பதில் கூறியுள்ளார். தற்போது நான் கோவிலில் இருப்பதால் வேறு மாதிரி சொல்ல விருப்பமில்லை என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.