- நாட்டு வைத்தியர் என்ற பெயரில் நூதனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்,நகையை பறிகொடுத்து தொடர்ந்து ஏமாறும் கிராம மக்கள், இனிமேலும் யாரும் ஏமாறாமல் இருக்க கிராம மக்கள் கோரிக்கை.
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமூளை கிராமத்தில் சமீபகாலமாக நாட்டு வைத்தியர் என்ற பெயரில் ஒரு இளைஞர் கிராம மக்களை ஏமாற்றி நகை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலடிக்குமூளை பகுதியில் உள்ள ஒரு காலணி வீட்டில் வசித்து வருபவர் கோவிந்தராசு என்பவரது மனைவி ஜோதி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கை, கால் இடுப்பு வலிகளுக்கு தன்னிடம் மருந்து இருப்பதாக கூறி ஒரு இளைஞன் அந்த பகுதியில் வந்து சென்றுள்ளார். அவரது அங்க அடையாளங்களை கூறி அருகில் இருந்த ஒரு பெண் தேடி வந்த பொழுது, அவரிடம் ஜோதி காரணம் கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்மணி அவரிடம் வாங்கி தைலம் தேய்க்கும் பொழுது உடல் கை கால் வலிகள் சரியாகும் என கூறுகிறார்கள் அதனால் அவரை தேடி வந்தேன் என்று கூறியுள்ளார்.
அவர் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அந்த இளைஞர் அந்த வழியாக வந்த பொழுது ஜோதி அவரை தொடர்பு கொண்டு தனது கணவருக்கு காலில் காயம் இருப்பதாகவும் அதற்கு மருந்து தரும்படி கேட்டுள்ளார். சரி என கூறி உள்ளே வந்த அந்த இளைஞர் தங்கள் வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதாகவும் அதனை தடை செய்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் என்றும், அதற்கு தன்னிடம் ஒரு வழி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
தனக்கு தாங்கள் விருப்பப்பட்டதை கொடுத்தால் போதும், தங்கள் வீட்டில் இருக்கும் பவுன் நகையினை கொடுங்கள் அதனை மந்திரித்து தருகின்றேன். அதனை பூஜை அறையில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டைப் பிடித்த பில்லி சூனியம் அனைத்தும் அகன்று விடும் என்று கூறியுள்ளார்.
அவர் பேச்சில் மயங்கி ஏமாந்த ஜோதி ஒரு தங்க சங்கிலியை கொடுத்து மந்திரிக்க சொல்லி உள்ளார். அவரும் மந்திரித்து தங்க சங்கிலியை பேப்பரில் சுத்தி பூஜை அறையில் வைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியது போலவே அவர் மடித்து கொடுத்த பேப்பரை பூஜை அறையில் வைத்து திறந்து பார்த்த பொழுது தங்கச் சங்கிலி இல்லை. ஜோதி அலரிஅடித்துக் கொண்டு தெருவில் வந்து பார்த்த பொழுது அவர் காணாமல் போய்விட்டார்.
அதன் பிறகு அவர்களது ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா புகழேந்தி இடம் சொன்ன பொழுது அவர் விசாரித்த போது கடந்த வாரம் அதே ஆலடிக்குமூளை ஊராட்சிக்குட்பட்ட நல்வழி கொள்ளை பகுதியில் வசித்து வரும் ராமமூர்த்தி மனைவி ராகினி என்பவரிடம் இதே கூட்டத்தில் ஒரு நபர் தனது சித்து விளையாட்டின் மூலம் ஒரு பவுன் மோதிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் திருடி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/a-petition-seeking-an-order-to-remove-the-seal-placed-on-his-company-by-the-corporation-for-non-payment-of-property-tax/
மேலும் இந்த நபர் சுற்றுவட்டார கிராமங்களில். தன் கைவரிசையை காட்டக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இது போன்ற நபர்களைக் கண்டால் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் பிடித்து ஒப்படைக்கும் படி ஆலடிக்குமூளை கிராமத்தினர் கூறுகின்றனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.