- பட்டியல் வகுப்பைச் சார்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் தனது தாய் தந்தையின் தங்களை கௌரவக் கொலை செய்ய முயற்சி செய்வதாக வழக்கு.
- காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி புதுமண தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு.
- சம்பந்தப்பட்ட போலீசார் அணுகி தம்பதியினர் மனு கொடுக்க வேண்டும் மனுவின் அடிப்படையில் உரிய பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை சக்குடியை சேர்ந்த கௌசல்யா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு ,மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தைச் சேர்ந்த நானும் எனது ஊரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தீபன் என்ற இளைஞரும் காதலித்து வந்தோம் எங்களது காதலுக்கு எனது வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் என்னை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல விடாமலும் தாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி முறையாக உணவு கூட வழங்காமல் என்னை கொடுமைப்படுத்தினர் .
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி எனது வீட்டில் இருந்து உயிருக்கு பயந்து தப்பிச் சென்ற நான் எனது காதலரான தீபன் உடன் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதனை அறிந்த எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் எனது கணவர் வீட்டிற்கு வந்து என்னையும் எனது கணவரையும் ஆணவ படுகொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.
எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்னிலையில் வந்தது .
காவல்துறை தரப்பில் இது தொடர்பாக புகார் அளித்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் கௌசல்யா தம்பதியை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.