திருவண்ணாமலை :குடும்ப பிரச்சினை தகராறு விசாரிக்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி லஞ்சம் ஒழிப்பு துறையால் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் வயது 44 இவரது மனைவிக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறு குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
புகாரினை விசாரிக்க காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி லஞ்சம் 3000 ரூபாய் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து வெற்றிவேல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்ததின் பேரில்.
புகாரினை விசாரிக்க ரூபாய் 3000 லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரிடம் லஞ்சப் பணம் ரூபாய் 3000 வாங்கிய பொழுது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறையால் பிடிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.