பல்லடம் அருகே-துப்பாக்கி மற்றும் அரிவாள்களுடன் நான்கு பேர் கைது – தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை .

2 Min Read
ஆயுதங்கள்

விவசாயம் செய்வதாக கூறி பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் கைது.

- Advertisement -
Ad imageAd image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக பல்லடம் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது உப்பிலிபாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவரது தோட்டத்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.போலீசாரை கண்டதும் அங்கு தங்கியிருந்த 6 பேரில் இருவர் தப்பியோடினர்.அதனை தொடர்ந்து போலீசார் அறையில் சோதனை செய்த போது அங்கிருந்த பையில் ஒரு ஏர்கன்,கத்தி,மற்றும் 5 அரிவாள்கள் இருந்துள்ளன.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பல்லடம் போலீசார் அங்கிருந்த நால்வரையும் கைது செய்து பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தப்பியோடிய இருவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஷியாம் மற்றும் சபரி என்பது தெரியவந்தது.இருவரும் கேரளாவில் நகை கடைகள் வைத்துள்ள நிலையில் அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்களது கூலிப்படையான பாலக்காட்டை சேர்ந்த காசீம்,பிபின் தாஸ்,பல்லடம் கரைப்புதூரை சேர்ந்த நவீன் ஆனந்த்,மற்றும் சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த செல்வகணபதி ஆகியோரை அழைத்து கொண்டு கடந்த 30 நாட்களுக்கு முன் பல்லடம் வந்துள்ளனர்.அருள்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை புரோக்கர் மூலம் சந்தித்த அவர்கள் பப்பாளி சாகுபடி செய்து அதனை ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் அதற்கு குத்தகைக்கு தோட்டம் வேண்டும் என கூறியுள்ளனர்.இரண்டரை ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த அங்கு பதுங்கிய அவர்கள் கடந்த 30 நாட்களாக விவசாயத்திலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள்

சோதனைக்கு வந்த போலீசாரை கண்டவுடன் முக்கிய குற்றவாளிகளான ஷியாம் மற்றும் சபரி அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது.அதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த‌‌பாலக்காட்டை சேர்ந்த காசீம்(37),பிபின் தாஸ்(29),பல்லடம் கரைப்புதூரை சேர்ந்த நவீன் ஆனந்த்(29) சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்த செல்வகணபதி(27) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏர்கன்,கத்தி,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஷியாம் மற்றும் சபரி ஆகியோரை பல்லடம் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.காசீம் மற்றும் நவீன் ஆனந்த் மீது திருப்பூர் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குள் பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது.

Share This Article

Leave a Reply