திடீர் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள் அவர்கள் முதல் 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேலை நிலைகுலைய செய்த பிறகு சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊடுருவினார்கள் இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர் 150க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த இஸ்ரேல் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது நேற்று ஐந்தாவது நாளாக இஸ்ரேல் ஹமாஸ் படையினரிடையே கடும் சண்டை நடந்தது இதையடுத்து ஹமாஸ் படையினர் ஊடுருவிய பகுதிகளை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
மேலும் எதிர்வரும் நாட்களில் தீவிர தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் அறிவித்தார் அதன்படி நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை காசா நகரில் சரமாரியாக குண்டு வீச்சு நடத்தியது. விடிய விடிய நடைபெற்ற சண்டையில் இஸ்ரேல் விமானப்படையின் 12 போர் விமானங்கள் அடுத்தடுத்து சென்று 200 இடங்களில் குண்டு வீசி கட்டிடங்களை தகர்த்தன இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக தெரியவந்துள்ளது இதனால் இஸ்ரேல் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3500 தாண்டி உள்ளது இஸ்ரேல் தரப்பில் மட்டும் 1200 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இருதரப்பிலும் இதுவரை 10,000 மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர் இந்த நிலையில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது அஸ்தோத் என்னும் பகுதியில் இருதரப்பினரிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. காசா முனைப்பகுதியில் தரச் என்ற இடத்தில் எழுவது கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் மிகப்பெரிய குண்டுகளை வீசின அங்கு ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின ஆயிரக்கணக்கானோர் அங்கே சிக்கி தவித்து வருகின்றனர்.

சிரியா தாக்குதல்
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் ஹமாஸ் படையினரும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்கள். பினை கைதிகளாக உள்ளவர்களை அவர்கள் கொடூரமாக கொன்று இன்று வீடியோ வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்துள்ளது ஹமாஸ் படையின் தளபதியாக திகழ்ந்தவர் முகமது டெத் இவரது வீடு இவர் தந்தை வசித்த வீடுகள் இன்று அதிகாலை இஸ்ரேல் ராணுவத்தால் அழிக்கப்பட்டது எல்லையில் சிரியா நாடும் நேற்று இரவு முதல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
அது போலவே லெபனான் எல்லைப் பகுதியில் இருந்தும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடந்தது. அந்த இரு இடங்களிலும் இஸ்ரேல் பதிலடி தாக்குதலை மேற்கொண்டன. இதன் காரணமாக இஸ்ரேல் நாடு முழுவதும் மும்முனை தாக்குதலை நேற்று முதல் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலுக்கு உதவுவதாக அமெரிக்கா ஏற்கனவே விமானம் தாங்கிய போர்க்கப்பலை அனுப்பி உள்ளது. இன்று நவீன ஆயுதங்களை ஏற்றிய விமானம் ஒன்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பி உள்ளது. அந்த விமானத்தில் வந்த ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேல் இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.