மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவினை தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர் . முன்னர் அறிவித்தது போல விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக இன்று கொண்டாடப்பட்டது .
முன்னதாக இன்று காலையில் சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது முழு உருவச் சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிலையில்,அரசியல் கட்சித் தலைவர்கள் , விஜயகாந்தின் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நீங்காத நினைவுகளுடன், என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன்.#HBDCaptain #HappyBirthdayVijayakant pic.twitter.com/1d2CbIRucb
— R Sarath Kumar (@realsarathkumar) August 25, 2024
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவரது X வலைத் தளப்பக்கத்தில், “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு புழல் ஒன்றியம் தீர்த்தகரையம்பட்டு பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் பாலவாயல் இ.சரவணன் தலைமையிலும் ஒன்றிய அவைதலைவர் ஸ்மைல் ரஞ்சித் முன்னிலையிலும் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவைகள் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கழக இளைஞரணி செயலாளரும், முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.நல்லதம்பி மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எம்.டில்லி ஆகியோர் கலந்துகொண்டு பெண்களுக்கு புடவைகளை வழங்கி, ஏழை எளியவருக்கு சுவையான பிரியாணி வழங்கினர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் கேப்டன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்து கழக கொடியினை ஏற்றி வைத்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/chief-minister-m-k-stalin-created-poverty-free-tamil-nadu-says-minister-raja-kannappan/
இதில் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி.பாபு ராவ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.