குவைத் நாட்டில் மங்காப் நகரில் நடந்த தீ விபத்தில் 50ற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் துரை வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் என அங்கிருந்து செய்திகள் வருகின்றன. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய அரசு விரைந்து செயல்பட்டு உயிர் இழந்தவர்களின் உடலை அவர்களின் ஊருக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தீ விபத்தில் பலியான தோழர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.