ஆந்திராவில் சந்தீப் என்ற சமந்தாவின் தீவிர ரசிகர், அவருக்கு கோவில் கட்டி இன்று திறந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ஏழைக் குழந்தைகளுக்கு சேவைகளை செய்து வருவதால் அவருக்கு கோயிலைக் கட்டியதாக சந்தீப் கூறியது நெகிழ்வை ஏற்படுத்தியது.
சமந்தா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் பலரது வரவேற்பை பெற்றுள்ளார். தெலுங்கிலும் சமந்தாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழில் பானா காத்தாடி மூலம் அறிமுகமான சமந்தா தனது நாட்டின் மூலம் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
சமந்தாவிற்கு கோவில் கட்டியது குறித்து சந்தீப் கூறும்போது,”சமந்தாவின் படங்களை பார்த்து அவரது தீவிர ரசிகராக மாறவில்லை. பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் சமந்தா பல சேவைகளை செய்து வருவதால் அவர் மீது எனக்கு நன்மதிப்பு வந்தது. அதனால் தான், அவருக்கு கோவில் கட்டினேன் என்று கூறியுள்ளார். இதனால் எனது வீட்டின் ஒரு பகுதியில் கோயில் கட்டியுள்ளதாகவும் சந்தீப் கூறியுள்ளார்.
நடிகை சமந்தா பிரத்யூஸா அறக்கட்டளை மூலம் ஏழ்மையில் உள்ள குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக பல உதவிகள் செய்து வருகிறார்.அதன் காரணாமாக மட்டுமே அவருக்கு சந்தீப் கோயில் கட்டியுள்ளார்.
சமந்தாவின் பிறந்தநாளான இன்று பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், சந்தீப் ஒரு படி மேலே சென்று அவருக்கு கோவில் கட்டி திறப்பு விழா கொண்டாடியுள்ளார். சந்தீப் உறவினர்கள், குடும்பம், நண்பர்கள் சூழ சமந்தாவின் சிலையை திறந்தனர். இந்த நிகழ்வு, நெகிழ்வை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.