அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஊழல்..தரமற்ற கட்டப்பட்ட 13 அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள்.. கொதிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

1 Min Read
  • 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 அடுக்குகளில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள 969 வீடுகளின் சிமெண்ட் பூச்சுகள் விரலால் சுரண்டினால் பெயர்ந்து விழுகிறது. மேலும். கதவு தாழ்ப்பாள்கள் கழண்டு கையோடு வருகிறது.

இந்த வீடியோ ஆதாரத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர். தர ஆய்வு செய்து வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

கோலமாவு என்ற பெயரில் ஆவணப்படத்தை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தஞ்சாவூர் வல்லம் பேரூராட்சி அய்யனார் கோயில் தெரு புறவழிச்சாலை அருகே தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகிறது.

இதில் 969 வீடுகள் கட்டப்பட்டதில் சுமார் ரூ.150 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. தரமற்ற இந்த அடுக்குமாடி வீடுகளை கட்டிய அரசு பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழை, நடுத்தர மக்களின் உயிர் பாதுகாப்பு கருதி தரமற்ற கட்டுமானத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஊழல் ஒப்பந்ததாரர்கள், அரசு பொறியாளர்கள், தரச்சான்று அளித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வல்லம் பேருந்து நிலையத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச. தமிழன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/thanjavur-1039-students-participated-in-various-programs-on-the-occasion-of-1039th-sadaya-festival/

 

Share This Article

Leave a Reply