இயற்கை வழியில் விளைச்சல்.! இயற்கை விவசாயி வேல்முருகன்.!

2 Min Read
விவசாயி வேல்முருகன்

ஐந்து ஏக்கர் நிலத்தில் நாங்கள் இயற்க்கை வழியில் பயிரிட்டு வருகிறோம்.நாட்டுப்பொன்னி,கருப்பு கவுனி,சீரக சம்பா

- Advertisement -
Ad imageAd image

தற்போதைய விஞ்ஞான உலகில் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டால் விளைநிலவும் உணவுப் பொருள்களும் வீணாகி உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் இயற்கை வழி பாரம்பரிய விவசாயம் அவசியமாகிறது. அதற்கு விவசாயிகள் தற்போது மாறி வருகின்றனர். விழுப்புரம் அருகே இயற்கை முறை விவசாயம் செய்து ஆரோக்கிய விளைச்சலுக்கு ஓர் விவசாயி வழிகாட்டியாக உள்ளார்.

அந்த வகையில் விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்த விவசாயி வேல்முருகன் , பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்கு வழிகாட்டியாக உள்ளார். வெறும் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் மண்புழு உரம் மாட்டு சாண எருக்களை பயன்படுத்தி ஆர்கானிக் முறையில் பயிரிட்டு தானும் பயன்படுத்தி பிறருக்கு விற்பனை செய்தும் வருகிறார்.

இயற்கை விவசாயம் குறித்து அவர் கூறியதாவது, உடல் நலத்துக்கு தீங்கிழைக்காத உணவுப் பொருட்கள் தேவை என்பதால் இயற்கை விவசாயத்தை கடந்த ஏழு ஆண்டுகளாக ஆர்வத்தோடு செய்து வருகிறேன். எங்கள் குடும்ப மருத்துவருக்கு சொந்தமான இந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் நாங்கள் இயற்கை வழியில் பயிரிட்டு வருகிறோம்.
முதலில் ஆடிப்பட்டத்தில் நெல் விதைப்பு செய்து நாட்டுப் பொன்னி, கருப்பு கவுனி, சீரக சம்பா முதலிய ரகங்கள் பயிரிட்டு ஆறு மாதங்களில் அறுவடை செய்த பிறகு மீதமுள்ள பகுதியில் வேர்கடலை,பயிறு, ஒரு பகுதியில் சம்பங்கி பூ,மற்றொரு பகுதியில் வாழை என இத்தனை வகைகளை பயிரிட்டு உள்ளோம்.

மழையில் ஊடுபயிராக தக்காளி மிளகாய் கத்திரி என தோட்டப்பயிர்களை செய்துள்ளோம். தொடர்ச்சியாக இவைகள் மாறி மாறி பயிரிட்டு அறுவடை செய்து அதனை எங்கள் சொந்த பயன்பாட்டுக்கும் மீதமுள்ளவைகளை குறைந்து விலைக்கும் விற்பனை கொடுக்கின்றோம். இதை நாங்கள் ஒரு சேவையாகவே செய்து வருகிறோம் என்று கூறுகிறார். அனைத்து பயிர்களுமே இயற்கை முறை விவசாயத்தில் தான் விளைவித்து வருகிறோம். முதலில் உழவு செய்த பிறகு மாட்டு சாணமும் எறுவிட்டும் பிறகு மண்புழு உரமிட்டும் நிலத்தை தயார்படுத்தி விதைப்பு செய்கிறோம்.

இயற்கை உரத்தை வாங்கி வந்து பயிருக்கு இட்டு வருகிறேன், பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த பஞ்ச காவியாவும் மிளகாய் இஞ்சி வேப்ப எண்ணெய் கலந்த மிளகாய் கரைசல் போன்றவற்றையும் பயன்படுத்துகிறோம். மோர் தேங்காய் கரைசலை நெல்லுக்கு எதிர்வரும் பருவத்தில் ஊக்கம் தரும் மருந்தாக இதை நாங்கள் தெளிக்கிறோம். சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துகிறோம், அதனால் குறைந்த நீர் செலவில் இயற்கை வழியில் விளைவித்து வருகிறோம். அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் என்கிறார் இயற்கை விவசாயி வேல்முருகன்.

Share This Article

Leave a Reply