ஓபிஎஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு – உடல்நிலை சரியான காரணத்தினால் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்..!

2 Min Read

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பாளர் கூட்டத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசவிருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்களாக நெல்லை தனியார் விடுதியில் தங்கியிருந்த ஓபிஎஸ் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு கார் மூலம் புறப்படுகிறார்.

உடல்நிலை சரியான காரணத்தினால் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலின் காரணமாக அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி சட்ட ரீதியாக ஓ. பன்னீர்செல்வம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

உடல்நிலை சரியான காரணத்தினால் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்

அந்த வகையில், ஓ. பன்னீர்செல்வம் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளத்தில் நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

உடல்நிலை சரியான காரணத்தினால் ஆலோசனை கூட்டத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்

இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு வரவில்லை. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனை மருத்துவர் ஓபிஎஸ் உடலை பரிசோதித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர் மீட்பு குழு சார்பில் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை தென்காசி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரைக்கு வருகை தந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.

ஓபிஎஸ்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தை முடித்து விட்டு வரும் வழியில் உடல் நிலை சரியில்லாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தார். இதன் காரணமாக நெல்லை மாவட்ட நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டது

இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு பின்னர் உடல் நிலை சரியான காரணத்தினால் நெல்லையில் இருந்து ராமநாதபுரத்திற்கு கார் மூலம் புறப்பட்டு சென்றார். இன்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெறும் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share This Article

Leave a Reply