“மாயமானும் மண் குதிரையும்” தினகரன் பன்னீர்செல்வம் பற்றி கிண்டல் அடித்த பழனிச்சாமி.

2 Min Read
தினகரன் ஓபிஎஸ்

‌‌ராமாயணத்தின் கதை விரிவடைவதற்கு காரணமான ஒரு பொருள் மான். சீதையை கடத்துவதற்காக ராவணன் போட்ட திட்டங்களில் மாயமான் ஒரு பாத்திரம். அதற்குப் பிறகு ராமாயணத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றமும் நிகழ்வும் நடந்திருப்பதாக வால்மீகி எழுதியிருக்கிறார். அந்த மாயமானை பற்றி தற்போது எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது அரசியலில் எப்படி பொருள் கொள்வது என்று தெரியவில்லை.

- Advertisement -
Ad imageAd image

‌‌மாயமானை தேடி சென்றதால் தான் ராமாயணத்தில் சீதை கடத்தப்பட்டதாக எழுதி இருக்கிறார் வால்மீகி. அப்படி அதிமுகவில் ஏதாவது நிகழப் போகிறதா? என்று தெரியவில்லை.‌‌அதே போன்று தினகரனை மண் குதிரை என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பன்னீர்செல்வம் தினகரன் மீது சவாரி செய்வதாக பொருள் கூறுகிறது அவருடைய அந்த பேச்சு.

அரசியல் வட்டாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த உதாரணங்கள் அதிக பேசுபொருளாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் பேசினார் பழனிச்சாமி.

‌‌ மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்து உள்ளது என்று பன்னீர்செல்வம், தினகரன் சந்திப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி கிண்டல் அடித்துள்ளார்.‌‌சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டியில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது அதில் பங்கேற்ற பின்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

டிடிவி ஓபிஎஸ் இபிஎஸ்

‌‌அப்போது பன்னீர்செல்வம், தினகரன் சந்திப்பு மாயமானும், மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது போன்றது. பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் சேர்த்தால் பூஜ்ஜியம் தான். துரோகி என தினகரனை பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். பதிலுக்கு அவரும் பன்னீர்செல்வத்தை துரோகி என்று குறிப்பிட்டார். இப்போது இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்துள்ள அணி குறித்து நாட்டு மக்கள் நன்கு அறிவர். காலியான தினகரன் கூடாரத்தில் பன்னீர்செல்வம் என்கிற ஒட்டகம் புகுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.‌‌

எம்ஜிஆர் ஆட்சி காலத்திலே பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சிக்குள் களங்கம் விளைவித்தவர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பிரிந்து சென்றவர். கட்சிக்கு விசுவாசம் இல்லாதவர் பண்ருட்டி ராமச்சந்திரன். பாமக, தேமுதிக என அவர் எங்கு சென்றாலும் அந்த கட்சியை முடித்து விடுவார்.‌‌அதிமுகவின் விசுவாசி போல மாயத் தோற்றத்தை கொடுக்கிறார். கிளை செயலாளர் தகுதி கூட அவருக்கு கிடையாது. என்று கூறினார்.‌‌

அதன் பின்னர் ஒரே ஒரு ஆடியோவால் திமுக அரசு ஆடிப் போய் உள்ளது அமைச்சரவையில் இருந்து பழனிவேல் தியாகராஜனை நீக்கினால் பல விஷயங்கள் வெளியே வந்துவிடும் என்ற அச்சத்தால் வேறு துறைக்கு அவரை மாற்றி உள்ளார்கள். இந்த ஆடியோ விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். கவர்னரை சந்திக்கும் போது இதுகுறித்து தெரிவித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அழுத்தம் கொடுப்போம்.‌‌1989 முதல் இதுவரை என் பெயரில் எந்த சொத்து வாங்கவில்லை 2009இல் திமுக அரசு என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என தெரிவித்துள்ளது. அரசியல் ரீதியாக எதுவும் செய்ய முடியாததால் திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. என் மீது போடப்பட்ட வழக்கு என் எல்லைக்குட்பட்ட இடைப்பாடி மாஜிஸ்ட்ரேட் மூலம் நடக்க வேண்டும். ஆனால் சேலம் நீதிமன்றத்தில் நடக்கிறது. திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு இவ்வாறு செயல்படுகிறது என்று கூறினார்.

Share This Article

Leave a Reply