எடப்பாடி ஓபிஎஸ்ஐ சந்திக்க மறுத்த மோடி.

2 Min Read
மோடி எடப்பாடி ஒபிஸ்

தமிழகத்தில் அதிமுகவுடன் தான் கூட்டணியில் உள்ளது பாஜக. இந்த நிலையில் நேற்று தமிழகம் வருகை புரிந்த பிரதமர் மோடி ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரை சந்தித்து பேச மறுத்துவிட்டார். காரணம் ஒன்றுபட்ட அதிமுகவை தான் பாஜக விரும்புகிறது. தமிழகத்தில் அதிமுக 4 கோஷ்டிகளாக பிரிந்து மோதுவதால் அதிருப்தி அடைந்த பிரதமர் விமான நிலையத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்து பேசி இருந்ததை ரத்து செய்து விட்டார்.

- Advertisement -
Ad imageAd image

அதிமுக நான்கு பிரிவுகளாக இருந்தாலும் ஓபிஎஸ்க்கும் எடப்பாடிக்கும் தான் இப்போது மோதல் நிலவி வருகிறது. இருவரும் மோடியையும் அமித்ஷாவையும் சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வந்திருந்தனர். அவர்களாலும் இவர்களுடைய மோதலை சரி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திப்பது என்கிற குழப்பத்தில் இருக்கிறது பாஜக.
இப்போது யாரை சந்தித்தாலும் இழப்பு பாஜகவுக்கு தான் என்பதில் உறுதியாக இருந்த மோடி இருவரையும் சந்தித்து பேசுவதை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி, அண்ணாமலை மோதல் வலுப்பெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு வங்கி குறைவுக்கு தலைவர்கள் ஒற்றுமை இல்லாததே காரணம் என மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் மீறி கூட்டணி வைத்துவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். அதிமுகவுடன் தான் கூட்டணி என்று அமித்ஷா  தெரிவித்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே மனக்கசப்பு அதிகமாக இருந்து வருகிறது.

டெல்லியில் அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி உண்டு என்று கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கர்நாடக தேர்தலில் அதிமுகவின் ஆதரவு வேண்டும் என்றார். ஆனால் கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு மூன்று தொகுதிகள் முதல் ஐந்து தொகுதிகள் கொடுத்தால் ஆதரவு தயார் என எடப்பாடி அறிவித்துவிட்டார். அதே நேரத்தில் அதிமுக இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றும் எடப்பாடி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஓ பன்னீர்செல்வம் அணியும் கர்நாடக தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. கர்நாடக மாநில தலைவர் புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து சீட்டு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக தலைவர்கள் கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவு தராமல் முட்டுக்கட்டை போடுவது கூட்டணிக்குள் குழப்பத்தை அதிகமாக ஏற்படுத்தி வருவதாக கருதிய மோடி இவர்களை சந்திப்பதை தவிர்த்து உள்ளார்.

Share This Article

Leave a Reply