சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி – சூ ஜெய்சங்கர் .

2 Min Read
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்கள்

சூடான் நாட்டின் உள்நாட்டு போரில் சிக்கி  இருக்கும் இந்தியர்களை பத்திரமாக தாய் நாட்டுக்கு கொண்டுவர ஆபரேஷன் காவேரி செயல் படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவ தளபதி தரப்பும் – துணை ராணுவப் படை தரப்பும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த போரில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், மேலும் 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த பதற்றமான சூழ்நிலை சூடானில் நீடிக்க அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இது தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது .

மேலும் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கப்பல்களையும், விமானங்களையும் மத்திய அரசு அனுப்பி உள்ளது. முதற்கட்டமாக சூடானில் சிக்கியுள்ள 500  இந்தியர்களை  கப்பல் மூலம் மீட்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது .

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவேரி’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 500 இந்தியர்கள் சூடான் துறைமுகத்துக்கு வந்துள்ளனர். மேலும், பலர் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக நமது கப்பல்களும் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. சூடானில் உள்ள நமது சகோதரர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க அணைத்து ஏற்பாடுகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது ” என்று பதிவு செய்துள்ளார் .

உக்ரைன் மற்றும் ரஷியா நாட்டு போரின் போது , அங்கு சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்க  மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் திட்டத்தை செயல்படுத்தியது போல தற்பொழுது , சூடானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காகு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது .

Share This Article

Leave a Reply