தமிழகத்தை மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் – அண்ணாமலை..!

2 Min Read
அண்ணமலை

தமிழகம் ஊழல் லஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகளால் கெட்டு விட்ட நிலையில், அதை மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு. பொதுவாக இளம் தமிழர்கள் ஸ்டாலினை, அண்ணாமலையுடன் ஒப்பிடுவார்கள். ஸ்டாலின் குடும்ப அல்லது வம்ச அரசியலையும், அண்ணாமலை சாதாரண தமிழனையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் என் மண், என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தஞ்சாவூர் தொகுதியில் கொடி மரத்து மூலையில் தொடங்கி வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி வழியாக கீழ வீதி நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து அவர் பேசிய கூறுகையில்; தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த என் மண், என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

அண்ணாமலை

தற்போது 113 ஆவது தொகுதியாக தஞ்சாவூர் தொகுதியில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் சாலை, பாலம், அனைகட்டு போன்ற உள்பட எந்த பணியும் உருப்படியாக நடைபெறவில்லை. மிக மோசமான அளவுக்கு தமிழகத்தை திமுக ஆட்சி மாற்றி வைத்துள்ளது. மிகவும் கெட்டு விட்ட தமிழகத்தை மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும். இந்த முறை 400- க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களுடன் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்க உள்ளார்.

அதில், தஞ்சாவூர் தொகுதியில் இருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கச் செய்ய மக்கள் முன் வர வேண்டும். உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு 20 இருக்கைகள் கொண்ட விமானச் சேவை தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை பாஜக அரசு தான் கொண்டு வந்துள்ளது என்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

அண்ணாமலை

இந்த என் மண், என் மக்கள் நடைப்பயணத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜக மாநிலப் பொதுச் செயளாலர் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் ஆகியோர் உள்பட ஏராளமானோர், இந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

Share This Article

Leave a Reply