ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதை கால நீடிப்பு செய்ய வேண்டும் – விக்கிரமராஜா

1 Min Read
விக்கிரமராஜா


‌ பொது மக்களை வஞ்சிக்கும் வகையில் உள்ள ஜிஎஸ்டி சட்ட மசோதாக்களை சரிப்படுத்தும் வகையில் மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியினால் வணிகர்களை கொடுமை படுத்தாமல் சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும்

- Advertisement -
Ad imageAd image

தற்போது ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளது. அதிலும் குறுகிய கால கட்டத்திற்கு அந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக நாள் ஒன்றுக்கு பத்து 2000 ரூபாய் வீதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் எனவும் கடந்த காலங்களில் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த நிலையில் மக்கள் உணவு கூட சிரமப்பட்டு கொண்டிருந்தனர்.

அப்போது வணிகர்கள் பொதுமக்களிடம் அந்த ரூபாய் நோட்டுகளை பெற்று வங்கியில் செலுத்தினார்கள். அப்போது அந்த வியாபாரிகளுக்கு வருவாய் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு பல லட்சம் ரூபாய்களை அபராதமாக விதித்தனர்.

2000 ரூபாய் மாற்றம் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள காலக்கெடுவை மாற்றி டிசம்பர் 31ம் தேதி வரை கால நீடிப்பு செய்ய வேண்டும். பல்வேறு சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு சிறு வீடுகளில் 2000 ரூபாய் நோட்டுகளை சிறுசேமிப்புகளாக வைத்துள்ளார்கள். அது போன்ற பணத்தை வங்கியில் செலுத்த மத்திய நிதி அமைச்சர் ரிசர்வ் வங்கியிடம் பேசி கால நீடிப்பு செய்து தர வழிவகை செய்ய வேண்டும். என தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply