ஆன்லைன் வர்த்தகம் சிறு வியாபாரிகளை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் களஞ்சியத்தை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாட்டு மக்களின் தேவை கருதி ஏற்கப்படும் சட்டங்களுக்கு கவர்னர் ஜனாதிபதி போன்றவர்கள் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்.
அப்போது ஆளுநரை மாற்றக்கூடாது. பின்னர் ஆளுநர் பதவியே தூக்க வேண்டும். இதுதான் நாம் தமிழர் கட்சியின் கோட்பாடு. மேலும் புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்களுக்கு கொடுக்கின்ற மரண சாசனம்.

வரலாறு நடத்துகிற ஆசிரியருக்கு புவியியல் தெரியாது. புவியியல் நடத்துகிற ஆசிரியருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலம் நடத்துகிற ஆசிரியருக்கு கடிதம் தெரியாது. ஆனால் இது எல்லாவற்றையும் மாணவர்கள் படிக்க வேண்டும். எனவே கல்வி முறையை மாற்ற வேண்டும்.

நாம் எவ்வளவு பெரிய இடத்திற்கு சென்றாலும் நம்மை விட்டு சாதி செல்லவில்லை. ஆன்லைன் வர்த்தகம் சிறு வியாபாரிகளுக்கு மேலும் சிரமத்தை உண்டாக்குகிறது. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்று பேசினார்.

அப்போது நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இயக்குனர் களஞ்சியத்திற்கு மைக் சின்னத்தில் வாக்குகளை கேட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.