தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளியின் ஒரு வயது மகள் உயிரிழப்பு.

1 Min Read
காவல் நிலையம்

நேபாளத்தைச் சேர்ந்தவர் கோபிசிங். இவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரது தோட்டத்தில் குடும்பத்துடன் தோட்ட வேலைகளை பார்த்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image


இன்று மாலை அவர் தனது மனைவி மகளுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மகள் ஆயிஷமா சிங் என்ற 1 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்தது.

உடனே அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார்  குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply