கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும் : பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும் – வானதி சீனிவாசன்..!

2 Min Read

கூட்டணி கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பது குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் கூறினார். தமிழக பாஜக மையக்குழு கூட்டம் தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வானதி சீனிவாசன்

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிறகு பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ அளித்த பேட்டி;-

மக்களவை தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என அந்தந்த தொகுதியில் உள்ள நிர்வாகிகள், முக்கிய தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட இருக்கிறது.

வானதி சீனிவாசன்

மேலும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்காக, மாநில அளவில் 2 முக்கிய தலைவர்கள் ஒவ்வொரு தொகுதிகளுக்கும் செல்ல இருக்கின்றனர். அவர்களிடம் அந்தந்த தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், தங்களது கருத்துகளை கூறலாம். பின்னர் வேட்பாளராக நிற்க விருப்பம் இருப்பவர்கள் கூட விருப்பதை தெரிவிக்கலாம்.

அப்போது மார்ச் 5 ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு ஒவ்வொரு தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட அலுவலகங்களிலும், மக்களவை தேர்தல் அலுவலகங்களிலும் இதற்கான கூட்டம் நடைபெறும்.

வானதி சீனிவாசன்

ஜனநாயக ரீதியாக ஒவ்வொரு பகுதியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்ய கருத்துகளை தெரிவிக்கும் வாய்ப்பாக இந்த கூட்டம் அமையும். அதன்பிறகு, தேர்தல் குழுவுடன் கூட்டம் நடத்தப்படும்.

இதில் வேட்பாளர் உத்தேசப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, டெல்லி தேசிய தலைமையிடம் வரும் 6 ஆம் தேதி வழங்கப்படும். அப்போது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை போய் கொண்டே இருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கு என்ற பேச்சு வார்த்தையும் போய் கொண்டே இருக்கிறது.

பாஜக தேசிய தலைமை முடிவு செய்யும்

ஒரு அரசியல் கட்சியாக எல்லா தொகுதிகளிலும் எங்கள் பணி இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும். அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என்பதை தேசிய தலைமை முடிவும். எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. நாங்கள் மக்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

Share This Article

Leave a Reply