பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி சிறுணியம் பலராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

2 Min Read
  • பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116வது பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் பொன்னேரியில் உள்ள அண்ணா சிலைக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. இவர் பத்திரிகையாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.

அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் – அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.

 

Share This Article

Leave a Reply