- தஞ்சை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் சரஸ்வதி சிலை முன்பு மாநகராட்சி கூட்ட தீர்மானம் நோட்டு, பேனா, டைரி வைத்து சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சரஸ்வதி சிலை முன்பு பொரி, அவல், பழங்கள், மாநகராட்சி தீர்மானம் நோட்டு, மேயர் பயன்படுத்தும் டைரி, பேனா ஆகிய பொருட்களை வைத்து பூஜை செய்து சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஓர் இந்து சமய பண்டிகையாகும். இது இந்து நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாட்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இவ்விழாவையினை தங்களது வழிபாட்டு முறைக்கு ஏற்ப கொண்டாடுகின்றனர். இந்தியத் துணைக் கண்டம் முழுக்கக் கொண்டாடினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள் போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுகிறது. இதனை அஸ்திர பூஜை என்றும் அழைப்பர். பூஜைக்காக வைக்கப்பட்ட பொருட்கள் மறுநாள் விஜயதசமி வரை எடுக்கப்படாமல் இருக்கும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சியும், கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெறுவதாக இந்து சமயத்தவர்கள் நம்புகின்றனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/tamil-nadu-karunanidhis-son-in-law-murasoli-selvam-passes-away-stalin-celebrities-pay-tearful-tributes/
புராணங்களின்படி இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் சென்றனர். பின்னர் ஓராண்டு அஞ்ஞாத வாசம் எனப்படும் ஆயுதங்களையும் அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து வந்தனர். இறுதியாக ஓராண்டு கழித்து ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை வன்னி மரப் பொந்திலிருந்து ஆயுத பூஜை நாளில் வழிபட்டு அருச்சுனன் எடுத்ததாகக் கருதப்படுகிறது. மற்றொரு கதையில் மகாபாரத குருச்சேத்திரப் போருக்கு முன் விரதமிருந்து காளிதேவிக்கு ஆயுத பூஜையன்று அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.