நவராத்திரியை முன்னிட்டு : வாசவி மகளிர் சங்க உறுப்பினர்கள் சார்பில் கொலு கண்காட்சி.!

2 Min Read
  • பட்டுக்கோட்டையில் நவராத்திரி திருவிழா கோலாகலம் – பட்டுக்கோட்டையில் தாமிரபரணி கொலு – நவதிருப்பதியையும், நவகைலாயத்தையும் ஒருசேர ஒரே இடத்தில் தத்ரூபமாக அமைத்துள்ள விதமும், இவற்றுக்கிடையே தாமிரபரணி ஆறு தத்ரூபமாகவே ஓடுவது – மகளிர் உறுப்பினர்கள் அசத்தல் – பார்ப்பவர்கள் அனைவரையும் வியக்க வைக்கிறது.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் உள்ள மஹாலில் நவராத்திரியை முன்னிட்டு வாசவி மகளிர் சங்க உறுப்பினர்கள் சார்பில் ஆண்டுதோறும் கொலு கண்காட்சி அமைக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வாசவி மகளிர் சங்க உறுப்பினர்கள் மிகவும் சிறப்பான முறையில் மஹாலில் கொலு கண்காட்சி அமைத்துள்ளனர். நிகழ்ச்சியின் முதலில் மகளிர் அனைவரும் சேர்ந்து லலிதா சகஸரநாமா வழி லெட்சார்சணை செய்து வழிபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

அதனைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து பாட்டுப்பாடி தீபாராதனை காட்டி நவராத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தின் சிறப்பான தாமரபரணி ஆறும் மற்றும் அந்த ஆற்றின் ஒரு கரையில் நவதிருப்பதியும், மற்றொரு கரையில் நவகைலாயமும் அமைந்துள்ள அனைத்து சிறப்புகளையும் இந்த கொலு கண்காட்சியில் அமைத்துள்ள விதம் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. மேலும் பல, பல, புது, புது கொலு பொம்மைகளை இந்த வருடம் அலங்காரத்தில் வைத்துள்ளனர்.
அவற்றில் ஒன்றான பட்டுக்கோட்டையில் தாமிரபரணி என்கிற கொலு அமைப்பு அனைவரையும் மிக கவர்ந்துள்ளது.

நவதிருப்பதியையும், நவகைலாயத்தையும் ஒருசேர ஒரே இடத்தில் தத்ரூபமாக அமைத்துள்ள விதமும் இவற்றுக்கு இடையே தாமிரபரணி ஆறு தத்ரூபமாகவே ஓடுவது குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் கண் சிமிட்டாமல் பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இது மகளிர் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். ஒவ்வொரு வருடமும் வித்தியாச, வித்தியாசமாக கொலு வைத்துள்ளோம். சென்ற வருடம் பிரம்மோற்சவம் கொலு வைத்தோம். தமிழக அளவில் இரண்டாவது இடத்தை நாங்கள் பெற்றோம். அதேபோல் இந்த வருடம் மிகவும் வித்தியாசமாக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நவதிருப்பதியையும், நவகைலாயத்தையும் ஒருசேர ஒரே இடத்தில் வைப்போம் என்று முடிவெடுத்து நாங்கள் நவதிருப்பதிக்கும்,
நவ கைலாயத்திற்கும் சென்று அதனை பார்த்து வந்தோம்.

பேட்டி. நித்யா – மகளிர் சங்க தலைவி

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/the-youth-who-was-searched-for-three-days-rescued-as-a-dead-body-near-the-drain/

அதனுடைய வரலாற்றையும் நாங்கள் தெரிந்து வந்தோம். மிக முக்கியமாக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு கரையில் நவதிருப்பதியும், மறு கரையில் நவகைலாயமும் இருக்கிறது. அதை இங்கு தத்ரூபமாக அமைத்துள்ளோம். இந்த நவராத்திரி 9 நாட்களிலும் நவதிருப்பதியையும், நவகைலாயத்தையும் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். அவர்கள் பார்த்துவிட்டு மெய்சிலிர்த்து மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். இது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தினசரி நிறைய பேர் வந்து பார்க்கிறார்கள். அது மேலும் கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

Share This Article

Leave a Reply