நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு : தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரம்.

2 Min Read
  • நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரம்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி முன்னிட்டு ஆறாம் நாளான இன்று ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது, தொடர்ந்து தஞ்சை பெரிய கோவில் தெற்கு மண்டபம் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு கண்காட்சியை ஏராளமானோர் பார்த்து வழிபட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர்.அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலக்குமியை வழிபடுகின்றனர். இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைகளை வழிபடுகின்றனர்.

நவராத்திரி விரதம் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது . ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும்  விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/the-madurai-session-of-the-madras-high-court-quashed-the-order-issued-by-the-state-level-inspection-committee-of-the-adi-dravida-welfare-department/

ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

Share This Article

Leave a Reply