- திருவையாறு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பாக மழை பொழிவு,விவசாயம் செழிக்க வேண்டி ஆடிபூர கஞ்சி கலய பெருவிழா.
திருவையாறு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பாக முப்பெரும் விழா கலச விளக்கு வேள்வி, அவதாரப் பெருமங்களம், ஆடிப்பூர கஞ்சி கலய பெருவிழா. முப்பெரும் விழாவில் மழை பொழிவு, விவசாயம் செழிக்க வேண்டி, மேட்டூர் அணையில் தண்ணீர் நிரம்பியே இருக்க வேண்டியும், உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனவும் கலச விளக்கு வேள்வி செய்து.
திருவையாறு செவ்வாய்கிழமை படித்துறை காவேரி ஆற்றில் இருந்து கஞ்சி கலயம் எடுத்து நான்கு முக்கிய ராஜவீதியில் வழியாக அந்தணர்குறிச்சியில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து ஓம் சக்தி ஓம் சக்தி என்று கூறி வலம் வந்த பராசக்திஅம்மன் அருளை பெற்று சென்றார்கள்.
விழாவின் ஏற்பாடுகளை வட்டத் தலைவர் அசோகன் பொருளாளர், பாலம்மாள் மற்றும் பக்தர்கள் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள். ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறைவனின் அருளை பெற்று சென்றார்கள்.
ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள். தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும்.
தாய் தெய்வ வழிபாட்டின் மிகப் பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.