ராசிபுரம் அருகே போதமலை மலைக்கிராமம் வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் தலைச்சுமையாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் தூக்கிக்கொண்டு நடந்த சென்ற அதிகாரிகள்.
நாமக்கல் மாவட்டம், அடுத்த ராசிபுரம் அருகே போதமலை மலைக்கிராமம் உள்ளது. இங்கு நாளை நடைபெற உள்ள நாமக்கல் நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, கீழுர், மேழுர் மற்றும் கெடமலை மலைக்கிராமத்தில் உள்ள 845 வாக்காளர்களும் வாக்கு செலுத்துகின்றனர்.

தற்போது ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலக வைப்பறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திர தொகுப்பு 2, படிவம் ஆகியவற்றை மண்டல அலுவலர் விஜயகுமார் தலையில் 9 பேர் கொண்ட குழுவினர் தலைச்சுமையாக அடிவாரத்தில் இருந்து சுமார் 7 கிமீ நடந்தே எடுத்து சென்றனர்.
இராசிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட போதமலை மலை கிராமங்கள். போதமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி. இதன் வடக்கே ஜருகு மலையும், தெற்கே கொல்லிமலையும் அமைந்துள்ளது.

மேலும் போதமலை மொத்தம் 13 கிமீ தூரம் கொண்டது. இதனால் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 அடி உயரத்தில் உள்ளது. இங்கு கீழுர், கெடமலை, மேலூர் என மூன்று குக்கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பேர் வசித்து வருகின்றனர். போதமலை கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது. எனவே அங்கு நடந்து தான் செல்ல வேண்டும். இவர்களுக்காக வாக்குப்பதிவு செய்ய ஒவ்வொரு தேர்தலிலும் இரு மையங்கள் ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகம் செய்யபடுவதற்கு முன்னர் போதமலை கிராமங்களுக்கு கழுதையின் மேல் வாக்கு பெட்டிகளை வைத்து கொண்டு செல்வது வழக்கமாகவே இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகைக்கு பிறகு கழுதையை பயன்படுத்துவதில்லை.
மேலும் தேர்தல் காலங்களில் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் மற்றும் வருவாய்த்துறையின் கடைநிலை ஊழியர்கள் மட்டும் செல்வார்கள். இந்த நிலையில் வருவாய்த்துறையினர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக எடுத்து சென்றனர்.

அப்போது மண்டல அலுவலர் பழனிசாமி தலைமையில் 9 பேர் கொண்ட குழு போதமலை ஏறினார். இவர்களுக்கு பாதுகாப்பாக ராசிபுரம் போலீசாரும், வனசரக அலுவலர்களும் மலைக்கு சென்றுள்ளனர்.
போதமலை மலை கிராமத்திற்கு ரூ.140 கோடி செலவில் கடந்த சில மாதங்களாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் தலைச்சுமையாக தூக்கி செல்லும் அவல நிலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.