பூந்தமல்லியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை.

2 Min Read
அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் பான் மசாலா குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் ஆகியன விற்க தடை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து பல கடைகளில் கள்ளத்தனமாக விற்கப்பட்டு வரும் நிலையில் உணவு பாதுகாப்பு துறை யினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனாலும் கூட பல இடங்களில் தடைசெய்யபட்ட குட்கா புகையிலை பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா என்பது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை
அகாரிகள் இரவு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

குட்கா புகையிலை பொருட்கள்

இதனையடுத்து பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து 10 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
முதல் முறை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுவது சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் 10 ஆயிரமும், மூன்றாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதிகாரிகள் சோதனை

அதையும் மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அந்த கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த ஆய்வின்போது பூந்தமல்லி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலவன் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் பல இடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply