வளவனுர் அருகே நர்சிங் மாணவி பாலியல் சீண்டல் விவகாரம் உறவினர்கள் சாலை மறியல்

1 Min Read
உயிரிழந்த இளம் பெண்

விழுப்புரம் அருகே வளவனூரில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வளவனூர் கவுன்சிலர் கந்தனை கைது செய்யவும் வலியுறுத்தி உடலை வைத்துக் கொண்டு உறவினர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மறியல்.

- Advertisement -
Ad imageAd image

வளவனூர் பகுதியைச் சார்ந்தவர் முருகன் லதா தம்பதியினரின் மகள் சென்னையில் திடீரென எலி பேஸ்ட் விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பழனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் வழியில் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் வளவனூர் பகுதியில் உறவினர்கள் சாவில் மர்மம் இருப்பதாகவும் இந்த இளம் பெண்களின் சாவிற்கு வளவனூர் பகுதியைச் சேர்ந்த அமமுக கவுன்சிலர் கந்தன் தான் காரணம் எனக்கோரி அவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் கோலியனூர் கூட்டு சாலையில் பாத்திரக்கடை வைத்திருந்த தற்போதைய கவுன்சிலர் கந்தனுக்கும் இறந்து போன பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை அறிந்த உறவினர்கள் அந்தப் பெண்ணை சென்னையில் தங்க வைத்துள்ளனர். மீண்டும் கவுன்சிலர் கந்தனும் அந்தப் பெண்ணும் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அதனால் அந்தப் பெண் கவுன்சிலருடன் தகாத உறவில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து திருமணம் செய்ய வலியுறுத்தி அந்த பெண் கேட்டதை தொடர்ந்து கவுன்சிலர் கந்தன் மறுக்கவே இளம் பெண் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சித்தார். சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தும் போனார். எனவே இதற்கு காரணமான கவுன்சிலர் கந்தனை கைது செய்ய வலியுறுத்தி சுமார் 500க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் வளவனூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கலந்து சென்றனர்.‌‌

Share This Article

Leave a Reply