தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

2 Min Read
சீமான் திருமா

நாம் தமிழர் கட்சி

- Advertisement -
Ad imageAd image

மக்களவைத் தேர்தலில் 8% மேல் வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சிதேர்தல் ஆணைய அங்கீகாரம் பெருகிறது.2 தொகுதிகளில் வென்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் அங்கீகாரம் பெற்றது.

சீமான்

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58% வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில், இந்தமுறை 8% மேல் வாக்குகளை பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி 12 மக்களவைத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமா

விடுதலைச் சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ள நிலையில், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விசிக பெற உள்ளது. விசிகவுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்க இருக்கிறது. மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெற சட்டப்பேரவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்று 2 சட்டசபை தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும் அல்லது மொத்தமுள்ள தொகுதிகளில் 3 சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது, மக்களவை தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 25 இடங்களுக்கு 1 எம்.பி சீட்டை வென்றிருக்க வேண்டும். அப்படி எங்குமே வெற்றி பெறாவிட்டாலும் 8 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.அந்த வகையில், தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் வென்றதால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைக்க உள்ளது. தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை ஏற்கனவே இழந்துள்ளன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் மூலமாக விசிக மாநில கட்சி அங்கீகாரத்தை பெற உள்ளது.

25 ஆண்டுகால கனவு

2 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. 1999-ல் இருந்து இந்த இயக்கம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்தல் களத்தில் நாங்கள் பணியாற்றி வந்துள்ளோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.

Share This Article

Leave a Reply