புதிய ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) பெறுவதற்கு இனிமேல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இடைத்தரகர்களையோ மக்கள் அணுகத் தேவையில்லை.
புதிய குடும்ப அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் பெறுவதற்கு ஆன்-லைனில் குறைந்த கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்
என உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று சட்டசபையில் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அமைச்சர் சக்கரபாணி உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,
புதிய ரேஷன் கார்டுகளை, விண்ணப்பித்த 15 நாட்களில் வழங்குவோம் என்று அறிவித்தோம். அதன்படி, கடந்த 23 மாதங்களில் 11 லட்சத்து 20 ஆயிரம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளில் 12 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைகள் முன்னுரிமை அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 41 லட்சத்து 68,292 பேர் பயனடைந்துள்ளனர்.
புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு இனிமேல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது இடைத்தரகர்களையோ மக்கள் அணுக வேண்டாம். புதிய ரேஷன் கார்டு அல்லது நகல் ரேஷன் கார்டு பெறுவதற்கு ஆன்-லைனில் குறைந்த கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க முடியும். அப்படி விண்ணப்பிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு வீட்டுக்கே வந்து சேரும்.

ட்விஸ்ட் செறிவூட்டப்பட்ட அரிசி ரத்தசோகை உள்ளவர்களின் நலனுக்காக விட்டமின், இரும்புச்சத்து, நுண்ணூட்டச் சத்து உள்ள செறிவூட்டப்பட்ட அரிசியை அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏப்.1 முதல் விநியோகிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிப்பதற்கான வசதியை அரவை ஆலைகளில் ஏற்படுத்த வேண்டி உள்ளது. எனவே வரும் ஜூன் மாதம் வரை மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்டுள்ளோம். இந்த அரிசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நியாய விலை கடை தமிழகத்தில் 35,941 நியாய விலைக் கடைகளில் பயோ மெட்ரிக், கண் கருவிழி என இருமுறையில் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
டெல்டா மாவட்டங்களில் 65 ஆயிரம் மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புகிடங்குகள் ரூ.45 கோடியில் அமைக்கப்படும் ” இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி
சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.
சரி, எப்படி நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம். https://www.tnpds.gov.in/ என்ற இணைய முகவரியை உங்கள் மொபைல் அல்லது கணிணியில் சொடுக்குங்கள்.

உள்ளே சென்றால், வலது புறத்தில் நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணபிக்க என்று இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
அதில் குடும்ப அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை கொடுங்கள்.
அதில் கேப்ட்சா குறியீடு இருக்கும் அதை கொடுத்து உள்ளே செல்லுங்கள்.உள்ளே சென்று விண்ணபித்து குடும்ப அட்டை நகலை அல்லது புதிய கார்டை பெறலாம்.
அதற்கு கட்டணம் செலுத்த கேட்கும். அதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை
இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தினால், புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வீட்டிற்கே புதிய ரேஷன் கார்டு வந்துவிடும்.
இந்த திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
வீடு தேடி ரேஷன் கார்டு வருவது, இடைத்தரகர்கள் மற்றும் அலுவலர்களை தவிர்ப்பது,செலவுகள் குறைப்பது என தமிழக அரசு போடும் இந்த அறிவிப்பெல்லாம் வரவேற்க்கதக்க ஒன்று தான்.
ஆனால், நியாய விலைக் கடையில் கொடுக்கும் பொருட்க்கள் தரமானதாகவும் கொடுக்கபடும் அளவுகள் சரியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அரசு இதை கருத்தில் கொண்டு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வெண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.