பூமியில் உலகளவில் பெரும் சாதனைகள் படைத்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் , தங்கள் சாதனையின் மேலும் ஒரு மைல்கல்லாக விண்வெளியில் மின்சாரமும், நீரும் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர் . பூமியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ள இஸ்ரோ , தற்போது மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்துள்ளனர் .
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்வெளியில் உள்ள நியூட்ரான் விண்மீன்கள் குறித்து ஆய்வு செய்ய எக்ஸ்போசாட் (XPoSat) எனும் அதிநவீன செயற்கைக் கோளை வடிவமைத்தது. இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் ஆங்கில புத்தாண்டு அன்று (ஜனவரி 1 ) காலை 9.00 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது .
20 நிமிட பயணத்துக்கு பிறகு, பூமியில் இருந்து 650 கி.மீ உயரம் கொண்ட குறைந்த தாழ்வட்ட சுற்றுப்பாதையில் 6 டிகிரி சாய்ந்த நிலையில் எக்ஸ்போசாட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் ‘போயம்’ (PSLV Orbital Experimental Module – POEM) எனும் சோதனை முயற்சியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்து விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்ளிட்டவற்றை ஆராய இந்த செயற்கைகோள் அனுப்பப்பட்டது.
பூமியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ள இஸ்ரோ, மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் விண்வெளியில் சூரிய ஒளி இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய செய்யமுடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் மின்சாரம் மட்டுமின்றி தூய நீர் மற்றும் வெப்பத்தையும் பெற முடியும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது .
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபியூயல் செல் கருவி இயக்கப்பட்டு 100 வாட் மின்சாரம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளன. இந்த வரிசையில் இந்தியா முதல் முறையாக விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.