- சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்
புறநகர் பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரத்தில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது குறித்தும், ஆய்வக பராமரிப்பின்மை குறித்தும் பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது.

இந்த செய்தியின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த பள்ளியை ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவும், ஆய்வகங்களை முறையாக பராமரிக்கவும், பள்ளி வளாகத்தைச் சுற்றி புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, இதுசம்பந்தமாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சி, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன.schoolschool இவற்றில் பல்வேறு பள்ளிகளில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் முறையாக இல்லை. குறிப்பாக, கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் பல மாதங்கள் செயல்படாமல் இருந்தன. இதன் காரணமாக கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குடிநீர் உள்ளிட்ட சுகாதார வசதிகள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும், புறநகர் பகுதிகளில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதன்படி திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள மொத்தம் 63 பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல பள்ளிகளில் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தப் பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் 40 முதல் 60 வரை சதவீத கழிவறைகள்தான் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. மாற்றத் திறனாளிகள் படிக்கும் 4 பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கழிவறைகள் இல்லை. 30 சதவீத பள்ளிகளில் கூடுதல் கழிவறைகள் கட்ட இட வசதிகள் இல்லாமல் உள்ளது.
85 சதவீத பள்ளிகளில் வெளியிலும், 85 சதவீத பள்ளிகளில் உள்ளேயும் கை கழுவும் வசதி உள்ளது. கரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காரணத்தால் இந்த வசதிகள் அனைத்து சேதம் அடைந்துள்ளன. சோப் அல்லது கை கழுவும் திரவங்கள் ஒரு இடத்தில் கூட இல்லை
தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை, வியாசர்பாடி, கல்யாணபுரம் மாநகராட்சி பள்ளியில், குடிநீர், கழிப்பிட வசதிகள் இல்லாதது, பள்ளியைச் சுற்றிலும் புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவது குறித்த செய்தி அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கு.
2 வாரங்களில் விரிவான பதில்மனு தாக்கல் செய்யவும் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு உத்தரவு.
Leave a Reply
You must be logged in to post a comment.