தென்சென்னை ராஜிவ் காந்தி ஐடி சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வை எளிதாக்கும் முயற்சியாக நாளை முதல் நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது அரசின் முக்கிய திட்டங்கள் எந்த அளவுக்கு களத்தில் வருகின்றன எவ்வாறெல்லாம் என்பதையும், சிறப்பாக இன்னும் மக்களை சென்றடைந்து அந்தத் நடைமுறைபடுத்தலாம் திட்டங்களை என்பதற்கான ஆலோசனைகள் எல்லாம் குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் மக்களுக்கான திட்டங்கள் மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும் என்றார்.

மேலும், இந்த கூட்டத்தில் முதலாவதாக மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் சென்னை நாவலூர் சுங்க கட்டண சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும்,மேலும் அடுக்குமாடி குடியிருப்பு, பொது குடியிருப்பு மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைக்கப்படும் என்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
திமுக அரசு பதவியேற்றவுடன், தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் கைவிடப்பட்டது. இதனால், இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர்.
தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பல பகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.