பேரிடரை பார்க்க வந்த நிதியமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் பழைய செலவு கணக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என திருநாவுக்கரசர் எம்.பி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, மத்திய அரசின் படகுகள், ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டு மிக துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மழைக்கு முன்பாகவே, 900 கோடி ரூபாய் நிதியும் தரப்பட்டு விட்டது. வானிலை ஆய்வு மையமும் முன்கூட்டியே எச்சரிக்கை அளித்துவிட்ட நிலையில், மத்திய அரசை குறை கூறுவது சரியானது அல்ல. சென்னைக்காக தந்த, 4,000 கோடி ரூபாய் திட்டத்திற்கான கணக்கு என்னானது?” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரியாக கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என, குறை கூறப்பட்டது.

தேசிய பேரிடர் என அறிவிக்கும் மரபே மத்திய அரசிடம் இல்லை. எனவே இப்போதைய வெள்ளத்தை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை என குறை கூறுவது சரியல்ல. மாநில அரசு துரிதமாக செயல்படுவதற்கு முன்பாகவே, மத்திய அரசின் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன என்பதே உண்மை.இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: புயல், பெருமழை, வெள்ளம் ஏற்படும்போது ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்துதான் மக்களை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தருவதில் ஒன்றிய அரசுக்கு, தேசிய பேரிடராக அறிவிப்பதில் என்ன சிக்கல் என தெரியவில்லை. தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டால் பக்கத்து மாநிலங்களின் நிதியையும் பெற முடியும். வரிச்சலுகை பெற முடியும். அதனால் கூடுதல் நிதி கிடைக்கும். மக்களை மீட்டெடுக்க முடியும். பேரிடரை பார்க்க வந்த ஒன்றிய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஏதாவது நிதி வழங்கலாம்.

இதையடுத்து பழைய செலவு கணக்கை பார்த்து கொண்டிருக்கிறார். மீண்டும் வெற்றிபெற்று வந்த பிறகு அந்த கணக்கை பார்க்கலாம். இப்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். உண்மையில் ஊழலை ஒழிப்பதற்காகத்தான் வழக்குகள் போடப்படுகின்றன என்றால், ஏன் பாஜ ஆளும் மாநில அமைச்சர்கள், பாஜ கூட்டணி அமைச்சர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு விரும்புபவர்கள் யார் வேண்டுமானாலும் போகலாம். ஆன்மிக சுற்றுலா செல்வோர் கூட வேளாங்கண்ணி, நாகூர், சுப்பிரமணியர் கோயிலுக்கும் செல்வார்கள். எனவே, விருப்பமுள்ளோர் போகலாம். காங்கிரசுக்கு எந்த தடையும் இல்லை. வேங்கைவயல் வழக்கை போலீசார் விரைவில் நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.