நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்தாஃப் மற்றும் ஜுனைத் ஆகிய இரண்டு வாலிபர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த நேரத்தில் கல்லார் அருகே சென்ற போது திடிரேன்று எதிரே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மனைவி வந்த கார் அந்த இருசக்கர வாகனம் இரண்டும் எதிரெதிரே மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் அதில் பயணித்த அல்தாப் மற்றும் ஜுனைத் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் அந்த இருசக்கர வாகனமும் தீ பற்றி எரிந்தது.
நீலகிரி காவல் கண்காணிப்பாளர் மனைவி வந்த காரும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து காயம் அடைந்த இரண்டு வாலிபர்களையும் மீட்டு, சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அல்தாஃப் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
மேலும் ஜூனைத் என்பவருக்கு உயிர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.