உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் நைட்டிங் கேல் அம்மையார் புகைப்படத்திற்கு மலர்தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, கைக்குலுக்கி. கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நைட்டிங் கேல் அம்மையார் பிறந்த தினம் ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 203வது பிறந்த தினத்தை ஒட்டி தஞ்சை அரசு இராஜா மிராசுதார் மருத்துவமனையில் செவிலியர்கள் நர்சிங் தினம் கொண்டாடினார்கள்.
அப்போது நைட்டிங் கேல் அம்மையார் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். செவிலியர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
பின்னர் கேக் வெட்டி செவிலியர்களுக்கு வழங்கி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். செவிலியர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். 20 ஆண்டுகள் பணி முடித்த செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 55 வயது மேல் உள்ள செவிலியர்களுக்கு இரவு பணி வழங்கக்கூடாது. செவிலியர்களுக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை செவிலியர்கள் தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.