தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே NIA(தேசிய புலனாய்வு முகமை)அதிகாரிகள் 13 பேரை கைது செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக ஐந்து பேரை தேடி வரும் அதிகாரிகள், இன்று தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ராஜகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை நடராஜபுரம் தெற்கு காலனியில் உள்ள எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த பக்ரூதீன், கும்பகோணத்தை சேர்ந்த அப்துல் மஜீத், ராஜகிரி பகுதியை சேர்ந்த முகமது பாரூக், திருபுவனம் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகியோர் வீடுகளில் சோதனை என்பது காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது.
NIA டிஎஸ்பி தலைமையில் நடைபெறும் இந்த சோதனையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.