இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு கட்ந்த ஒரு ஆண்டு காலமாக சிகிச்சை பெற்று வந்த செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி இன்று காலமானார்.
செளந்தர்யா கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவரது ரத்த புற்று நோயை குணப்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் , அவரை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு, அவர் வேலை பார்க்கும் நிறுவனம், எனப் பலரும் அவருடைய மருத்துவ செலவில் பங்கெடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கொடூர கேன்சர் நோயில் இருந்து எப்படியும் மீண்டு வந்து விடுவேன் என்கிற நம்பிக்கையுடன் இரண்டு கீமோதெரபியையும் புன்னகையுடனே எதிர் கொண்டவர் சௌந்தர்யா . அவருடைய பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள் இட்ட சமூக வலைதள பக்கங்களில் தான் எப்படியும் மீண்டு வந்து விடுவேன் என்று தன்னம்பிக்கையோடு பதிவு செய்து வந்தார் .
இருப்பினும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவரது ரத்த புற்று நோயை குணப்படுத்தும் என்பதால் இந்த சிகிச்சைக்கு 50 லட்சம் தேவைப்படுவதால் பொதுமக்களிடம் நிதியுதவியை கோரி வந்தார் .

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று திடீரென்று காலமானார் .அவ ரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவரது இந்த திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரஸ் கிளப்பில் பத்திரிக்கை நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் தற்போது அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.