போலி வீடியோக்களை கட்டுபடுத்த புதிய விதிமுறைகள் – அஸ்வின் வைஷ்ணவ்..!

2 Min Read

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் தயாரிப்பதை கட்டுப்படுத்த விரைவில் புதிய வழிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மத்திய மந்திரி அஸ்வின் வைஷ்ணவ் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களை போன்ற போலி வீடியோக்கள் (டீப் பேக்ஸ்) தயாரித்து வெளியிடப்படுகின்றன. அதுபோல பிரபலங்களின் உருவ ஒற்றுமையில் உள்ளவர்களின் உடலில் பிரபலங்களின் தலையைப் பொருத்தி இந்த போலி வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. நடிகைகள் ரேஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோல் ஆகியோரை போன்ற போலி வீடியோக்கள் வெளியாகின.

மத்திய மந்திரி அஸ்வின் வைஷ்ணவ்

பிரதமர் மோடி போன்ற போலி விடியோயவும் வெளியானது. இத்தகைய வீடியோ தயாரிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இந்த நிலையில் போலி வீடியோக்கள் குறித்து சமூக வலைத்தள நிறுவனங்களில் பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வின் வைஷ்ணவ் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது; போலி வீடியோ விவகாரம், ஜனநாயகத்துக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. போலி வீடியோக்களை கண்டறிதல், பரவாமல் தடுத்தல், புகார் கூறும் முறையை வலுப்படுத்துதல் போன்ற தெளிவான செயல்பாடுகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை சமூக வலைதள நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. பயனாளர்களுக்கு விழிப்புணர்வை அதிகரிக்கும் சம்மதித்துள்ளன. போலி வீடியோக்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைவில் புதிய விதிமுறைகளை கொண்டு வரும் விதிமுறை வகுப்பதற்கான பணிகள் இன்று தொடங்கப்படும்.

மத்திய மந்திரி அஸ்வின் வைஷ்ணவ்

குறுகிய காலத்தில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படும். ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் அல்லது புதிய விதிமுறைகளோ புதிய சட்டமோ கொண்டு வரப்படும். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அடுத்த கூட்டம் நடக்கும். இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான தொடர் நடவடிக்கை எடுப்பதாக அக்கூட்டம் இருக்கும். மேலும் புதிய விதிமுறைகளில் என்னென்ன சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார்

Share This Article

Leave a Reply