செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி – மீண்டும் கட்சியில் என்ட்ரி..!

2 Min Read

விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில், புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான். இவர் கடந்த வாரம் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமிக்கப்பட்டார்.

 

செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி – மீண்டும் கட்சியில் என்ட்ரி

இந்த நிலையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து அவைத் தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

திமுக

இந்த தேர்தலில் செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதை அடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

செஞ்சி மஸ்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்திலிருந்தே கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்து வருகிறார்.

செஞ்சி மஸ்தான்

அமைச்சர் மஸ்தானுக்கு உதவியாளராக இருந்து வரும் மருமகன் ரிஸ்வான் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

அதுபோல் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மஸ்தானின் மகன் கே.எஸ்.எம். மொக்தியார் அலி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் மஸ்தானுக்கும் பொன்முடி தரப்புக்கும் ஏதோ பிரச்சினை என கூறப்படுகிறது.

செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி

இது குறித்து பொன்முடி தரப்பினர் அல்லாமல் வேறு யாரோ தலைமைக்கு புகார் கூறியதால் தான் மஸ்தான் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என விழுப்புரம் மாவட்ட திமுகவினர் தெரிவித்தனர். தற்போது மஸ்தானுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply