Kanniyakumari : உடல் பருமனை குறைக்க உணவு கட்டுபாட்டிலிருந்த புது மணப்பெண் , திடீர் மரணம்

2 Min Read
உயிரிழந்த அருள் ஷபானா லெனி ( வயது 24 )

உடல் எடையைக் குறைப்பதற்காக உணவுக் கட்டுப்பாட்டிலிருந்த மணக்குடியை சேர்ந்த புதுப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

- Advertisement -
Ad imageAd image

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி அந்திரியார் நகரைச் சேர்ந்தவர் பெட்சன் புருனோ இவர் மனைவி அருள் ஷபானா லெனி ( வயது 24 ) இவர்களுக்குக் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது .

பெட்சன் புருனோ மீன்பிடி தொழில் செய்து வருகிறார் அருள் ஷபனா லெனி உடல் பருமனாக இருந்ததால் உடல் எடையைக் குறைப்பதற்குக் கடந்த சில மாதங்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார் .

அதிகமாக உணவு உட்கொண்டால் எங்கே தனது சிகிச்சை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் , தான் இயல்பாகச் சாப்பிடும் அளவை கூட கட்டுப்படுத்திச் சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளார் .

சுசீந்திரம் காவல் நிலையம்

இந்த நிலையில் அவரது தாயார் பேபி சகியா மற்றும் தந்தை அருள் வினோ ஆகியோர் மகளைப் பார்ப்பதற்காக மணக்குடியில் உள்ள அருள் ஷபனா லெனி வீட்டிற்குச் சென்றனர்.

வீட்டில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே அருள் ஷபனா லெனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது . எனவே வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று மருந்து அருந்தி விட்டு வருவதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு மாடிக்குச் சென்றவர் திடீரென பலத்த சத்தம் எழுப்பியுள்ளார் .

வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்த அவரது பெற்றோர் மாடிக்குச் சென்று அவரைப் பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார் .

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்று முதல் உதவி சிகிச்சை கொடுத்தனர் .

அருள் ஷபானா லெனி

அங்கே போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் . அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் , அருள் ஷபானாவை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் .

எனினும் துரதிருஷ்டவசமாக அங்கு அவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அருள் ஷபனா லெனி இறந்து விட்டதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர் .இது குறித்து அருள் ஷபனாவின் தந்தை அருள்வினோ சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .

உயிரிழந்த அருள் ஷபானா லெனி ( வயது 24 )

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுசீந்திரம் போலீசார் அருள் ஷபனா லெனி மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் அருள் ஷபனா லெனிக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆகியுள்ள நிலையில் அவரது மரணம் குறித்து நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார் .

திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் பெண் , உடற் பருமனைக் குறைக்கத் தவறான உணவு முறையைப் பின்பற்றி உயிரிழந்த சம்பவம் மணக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Share This Article

Leave a Reply