ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி;- தேர்தல் பிரசாரங்களில் நாட்டினுடைய பிரதமர், அவர் வகிக்கிற பொறுப்புக்கு ஏற்றவாறு அல்லாமல் மக்களை பிளவுபடுத்தக்கூடிய முறையில் பேசுவது நாகரீகம் அல்ல.

மக்களிடத்தில் மோதலை உருவாக்குகிற முறையில் பேசலாம் என்று பேசுவது, முற்றிலும் ஜனநாயகத்திற்கு, அரசியலமைப்பு சட்டத்திற்கு, நம் நாடு ஏற்றுக்கொண்டிருக்கிற மதசார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும்.
ஏன்? மோடி இப்படி பேச துவங்கி உள்ளார் என்றால், முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த இடத்தில் அவருக்கு சாதகமாக இல்லை.

தமிழ்நாட்டிற்கு 9 முறை பிரசாரம் செய்தும், பயன் அளிக்கவில்லை என்கிற தோல்வி பயத்தால் பேசி வருகிறார். பிரதமரின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் தேர்தல் ஆணையத்தில் கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் யார் மீது கொடுக்கிறாமோ, அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் நட்டாவுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பகத்தன்மை தொடர்ச்சியாக கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது.
நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசார முறை, அவர் அணுகும் முறை எல்லாம் ஹிட்லரை முன்னுதாரணமாக கொண்டுள்ளது. ஹிட்லர் வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.