எடையூர் பகுதியில் 4 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் – ஒருவர் கைது..!

2 Min Read

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர வேட்டை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, எடையூர் காவல் ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் எதிரியின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட 01. Hans – 16 கோணி பைகள் (1643 பாக்கெட்டுகள் – 538 Kg), 02. Pan Masala – 67 (பாக்கெட்டுகள் – 6.7 Kg), 03. VT Tobacco – 67 (பாக்கெட்டுகள் – 1.7 Kg) என மொத்தம் சுமார் 545 – கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார்

இதன் மதிப்பு சுமார் 4 லட்சம். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த திருத்துறைபூண்டி தாலுக்கா, கீழ பாண்டி, மேல தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் வெங்கடாசலம் (வயது-40) என்பவர் கைது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, குட்கா பேன்ற பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, வேறு எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று காவல்துறையினர் தொடரந்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வருகின்றனர்.

அரசால் சிறப்பாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்களை பறிமுதல் செய்த எடையூர் காவல் ஆய்வாளர் திரு. அனந்தபத்மநாபன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் (M.Sc(Agri) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

எடையூர் பகுதியில் 4 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா மற்றும் குட்கா, போன்ற போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார், M.Sc(Agri.) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

காவல்துறையினர் கூறுகையில்;- இதுபோன்ற குற்ற செயல்களை ஈடுபடாமல் இருக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

Share This Article

Leave a Reply