திருவள்ளூர் அருகே அரசு ஊழியர்களை மிரட்டியை நாம்தமிழர் கட்சியை சார்ந்த போலி வழக்கறிஞர் கைது…..
.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த காயலார்மேடு கிராமத்தை சேர்ந்த நந்திவர்மன் என்பவர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கடந்த 19ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகம் வந்த நந்திவர்மன் மற்றும் அவருடன் வந்த புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் ஆகியோரும் தங்களை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என அறிமுகம் செய்து கொண்டு அலுவலக உதவியார் வேலாயுதத்தை அவதூறாக பேசி உள்ளனர். மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்து வட்டாட்சியரை கோபப்படும் வகையில் பேசி வட்டாட்சியருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இது தொடர்பாக வட்டாட்சியர் பிரீத்தி அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலையத்தில் கடந்த 22 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து நந்திவர்மன் உட்பட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான நந்திவர்மன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நந்திவர்மன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் நாம் தமிழர் கட்சியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை தொடர்பு கொண்ட போது, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக நாம் தமிழர் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.
மேலும் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாக கூறி வந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணையில் போலி வழக்கறிஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.